குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க அலுவலகத்தில் 74வதுஆண்டு சுதந்திர தின விழா

குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க அலுவலகத்தில் குன்னூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் சமூக நல அமைப்புகள் சார்பில்  74வதுஆண்டு சுதந்திர தின விழா கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


வியாபாரிகள் சங்க  செயலாளர் எம்.ஏ.ரகீம், தலைமை ஏற்றார் நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவரும், குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவருமான ஆர்.பரமேஸ்வரன் கொடி ஏற்றி  சிறப்புரையாற்றினார். முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் குன்னூர் வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினருமான சையதுமுபாரக்  அனைவருக்கும் இனிப்பு வழங்கி கௌரவித்தார்


இந்நிகழ்ச்சியில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தைச் சார்ந்த  மது,காஜா,ராஜ்குமார்,மூர்த்தி, ராமு, வினோத்,முருகன், கார்த்திக் காதர், சப்தர்உசேன், பாலசுப்ரமணி ராமகிருஷ்ணன் நாசர் மதுசூதனன்  கிருஷ்ணசாமி, சலாம், சாகுல் அமீது,  சண்முகம்,கோவிந்தன், மதினா ரஃபிக் பொதுநல அமைப்பைச் சார்ந்த கன்சர்வ்எர்த்.பவுண்டேசன்வினோத், கார்த்திக் சமீன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.