74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம், பென்சில், இனிப்புகள்...


74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரம் அடுத்த கண்டோன்மென்ட் பகுதியில் தி.மு.க நகர சிறுபான்மை நல உரிமை  பிரிவு அமைப்பாளர் உமர் ஏற்பாட்டில் தி.மு.க ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் த.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம்,பென்சில்,இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினார்.


பின்பு அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டவற்களுக்கு பால்பாக்கெட் மற்றும் உணவு வழங்கினார். இதனை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடித்து பெற்று சென்றனர் .மேலும் அப்பகுதியில் புதிதாக அமைக்கபட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .