திட்டக்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி 76 வது பிறந்த நாள் விழா

திட்டக்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 76 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 கடலூர் மாவட்டம திட்டக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் ஒபிசி துறை சார்பாக ராஜீவ்காந்தி 76வது பிறந்த நாளையொட்டி திட்டக்குடி பஸ்நிலையத்தில் அவரது திருவுருவ படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

விழாவிற்கு நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, ஓபிசி துறை நகர தலைவர் சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓபிசி துறை மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள், கபசரகுடிநீர், சனிடைசர், முக கவசம் வழங்கப்பட்டது. இதில் எஸ்சி அணி ஒருங்கிணைப்பாளர் காமராஜ்,  ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் தங்கபாண்டியன், தங்கவேலு, சண்முகம், பெண்ணாடம் நகர தலைவர் வீரப்பன், உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.