கோபி பூங்கரைப்புதூரில் 82 பயனாளிகளுக்கு  ரூ 67.30  லட்சம் மதிப்பிலான கறவை மாடு  மற்றும் கன்று வளர்ப்பிற்கான கடனுதவி


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  சட்டமன்றத் தொகுதி  கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சி பூங்கரைப்புதூரில் 82 பயனாளிகளுக்கு  ரூ 67.30  லட்சம் மதிப்பிலான கறவை மாடு  மற்றும் கன்று வளர்ப்பிற்கான கடனுதவிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

 

அருகில்கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஈரோடு மண்டல இணை பதிவாளர் பார்த்திபன், துணை பதிவாளர் கோபி சரகம் கந்தராஜா, முதன்மை வருவாய் அலுவலர் மத்திய கூட்டுறவு வங்கி அழகிரி, ஒன்றிய குழுத்தலைவர் மௌதீஸ்வரன் .மாவட்ட கவுன்சிலர் அனுராதா, கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், சொசைட்டி தலைவர்கள் கருப்புசாமி,சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.