உலக நன்மை வேண்டி சேலம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

உலக நன்மை வேண்டி ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை  நடைபெற்றது.                     சேலம் மாவட்டம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நவ தானியங்களால்அலங்காரம் செய்திருந்தனர்.


கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது மக்கள் அனைவரும் கொடிய நோயிலிருந்து மீண்டு வர உலக நன்மை வேண்டி இன்று சிறப்பான முறையில் பால் தயிர் சந்தனம் மஞ்சள் குங்குமம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து  ஒன்பது வகையான நவதானியங்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.


கோவில் அர்ச்சகர் கோவில் ஆகம விதிப்படி காலை மற்றும் மாலை பூஜை செய்யப்பட்டு நடை சாத்தப்படுகிறது. கோவில் அர்ச்சகர்கள் சிறப்பாக அம்மானை அலங்காரம் செய்திருந்தனர்.