சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட குளங்களை தூர்வாரும் பணி, எம்.எல்.ஏ.., எஸ்.டி.கே ஜக்கையன், மற்றும் வி.ப.ஜெயபிரதீப் ஆகியோர்  துவக்கி வைத்தனர்


 

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்கோட்டை கட்டபொம்மன் குளம், பல்லவராயன்பட்டி தாதன்குளம், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம் ஆகிய குளங்களிலிருந்து பாசன வசதி பெறும்  விவசாயிகள் குளங்களை தூர் வாரி தருமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில்  மாவட்ட கழகம் சார்பில்  இன்று இக்குளங்களில்  தூர்வாரும் பணியினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன்,  கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

 


 

இக் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  குளங்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை கொண்டு கரைகள் பலப்படுத்தும் பணியும் கரையோரங்களை பலப்படுத்துவதற்காக மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெறும். 

 

வரத்து வாய்க்கால் உபரி நீர் வாய்க்கால் அனைத்தும் சீரமைக்கப்பட்டு இக்குளம் கொலை சுற்றியுள்ள விவசாயிகளின் விவசாய பணிக்காக நிலத்தடி நீர் உயரும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்தப் பணியால் இந்தக் குளங்களைச் சுற்றி உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் நிலம் பாசன வசதி பெறும். மேலும் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் குறை நிறைகளை கேட்டறிந்த ஜெயபிரதீப் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் விவசாயிகளின் நலனுக்காக அதிமுக  தலைமையிலான அரசு விவசாயிகளின் அனைத்துக் குறைகளையும் நிறைவு செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். 

 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பீரித்தா நடேஸ், ஒன்றிய செயலாளர்கள் சின்னமனூர் விமலேஸ்வரன், உத்தமபாளையம் தெற்கு  அழகுராஜா,  வடக்கு  கதிரேசன், கம்பம் இளையநம்பி,   உத்தபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜான்சிவாஞ்சிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வசந்தா நாகராஜ், அல்லிமாயழகு, பேரூர் செயலாளர்கள்  ஹைவேவிஸ் குபேந்திரன், அனுமந்தன்பட்டி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மார்கண்டன், பல்லவராயன்பட்டி கிளை செயலாளர் மாயழகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Previous Post Next Post