நத்தம் அருகே மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை சிறைப்பிடித்த அ.ம.மு.க கட்சியினர்

நத்தம் அருகே நான்கு வழி சாலை அமைப்பதற்காக அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை சிறைப்பிடித்த அ.ம.மு.க கட்சியினர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து மதுரை வரை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

 


 

இதற்காக சாலை அமைக்கும் பணி நடைபெறும் பகுதிகளின் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள குளங்களில் உள்ள மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் முறைகேடாக மணல் அள்ளுவதை தொடர்ந்ததாக கூறி நத்தம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் ஜேசிபி,பொக்லைன், லாரிகளை உள்ளிட்டவற்றைக் வாகனங்களைக் கொண்டு  மணல் அள்ளிக் கொண்டிருந்த நபர்கள் மற்றும்  வாகனங்களை  நத்தம் பகுதி அமமுக கட்சியினர் அள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அங்கு சென்று அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார் அங்கிருந்து வாகனங்களே அப்புறப்படுத்திய காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அமமுக வினர் முற்றுகையை கைவிட்டனர்.