ஏ கே அறக்கட்டளை சார்பில் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு சானிடைசர் இயந்திரம் மற்றும் முக கவசம்

திட்டக்குடி காவல் நிலையத்திற்கு ஏ கே அறக்கட்டளை சார்பில் சானிடைசர் இயந்திரம் மற்றும் முக கவசம் வழங்கபட்டது.

 


 

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக அரசு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி நடமுறையில் உள்ளது இந்நிலையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர்  மற்றும் சுகாதார வருவாய் துறை அரசு ஊழியர்கள் அனைவரும் தன்னையே அர்ப்பணித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்நிலையில் அவர்களின் நலன் கருதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கு மற்றும் அரசு அலுவலகங்களில் நேரில் சென்று உதவி செய்து வரும் ஏ கே அறக்கட்டளை சார்பில் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு சானிடைசர் இயந்திரம் மற்றும் முழு முக கவசம் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு இடம் வழங்கினார்.

 

பின்னர் காவல் ஆய்வாளர்  சானிடைசர் இயந்திரத்தை  துவக்கி வைத்தார். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.