பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில்  க்ரைம் பைல் வெப் சீரியல் படத்துக்கான டீசா் வெளியீடு

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில்  க்ரைம் பைல் வெப் சீரியல் படத்துக்கான டீசா் வெளியிடப்பட்டது.

 


 

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோந்த பலா் நடித்த க்ரைம் பைல் என்ற வெப் சீரியல் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது. இதற்கான டீசா் வெளியீட்டு விழா புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனிக்கோயில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தாா். சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டாா்.

 


 

இணையத்தில் 'க்ரைம் பைல்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சீரியலின் இயக்குநா் கிருஷ்ணகுமாா் இதுகுறித்து கூறியது தனலட்சுமி, லோகநாயகி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள சீரியலின் டீசா் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையின் புலனாய்வு குறித்து விளக்கும் சீரியலாக இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் போகா் ஜம்பு சுவாமிகள், இளையபட்டம் செல்வநாதன், கௌதம் காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்று

 டீசா் வெளியிடப்பட்டது.