ஆண்டிபட்டியில் இந்து அமைப்பினருடன் போலீஸார் ஆலோசனை கூட்டம்தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வருகின்ற 22 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாது காத்திட பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடப்படுவதுதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகாலில் இந்து  அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலும்
ஆண்டிபட்டி டி.எஸ்பி.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி நகர்ப் பகுதி மற்றும் கிராமப்புறங்க ளில் பொது இடங்களில் சிலை வைக்கவும், ஒலிபெருக்கி அமைக் கவும் , சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும்,  கூட்டமாக சிலையை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் ஆண்டிபட்டி தாலுகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதி கிடையாது என்றும், கட்டுப்பாடுகளுடன் சிறிய கோயில்களில் சாமி கும்பிடு வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


அதன்படி கோயிலுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென டிஎஸ்பி கூறினார். இதற்கு அனைத்து இந்து அமைப்பினரும் அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி அளித்தனர்.

இதில் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ், பாஜக கட்சி சார்பில் மாவட்ட துணைத்தலைவர்  குமார், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், விஸ்வ இந்து பரிஷித் மாவட்ட துணைத்தலைவர் கண்ணாயிரம் உள்பட அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலரும் ஆண்டிபட்டி கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தின் சார்பில் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.