கோபி  ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி... அமைச்சர் கே.சி. கருப்பணன் பாராட்டு


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள   ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 265 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


இப்பள்ளியில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற எஸ். ரிதன்யா  என்ற மாணவியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பாராட்டி இனிப்பு மற்றும்  கோப்பையை வழங்கினார்.


உடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி கல்வி நிறுவனங்களின் செயலர் ஜி.பி கெட்டி முத்து ,அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், இயக்குனர்கள் ஜோதிலிங்கம், முருகசாமி, மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.