தேனி வட்டார ஜமாஅத் சார்பில் தேனி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சுதந்திர தின விழா

தேனி வட்டார ஜமாஅத் சார்பில் சுதந்திர தின விழா தேனி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

 


 

தேனி வட்டார ஜமாஅத் தலைவர்  சுலைமான் விழாவிற்கு தலைமை யேற்றார். தேனி புது பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் சர்புதீன் வரவேற்றார், தேனி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் பொன்ராஜ் கொந்தளம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

 


 

தேனி புது பள்ளிவாசலில் ஜமாஅத் தலைவர் சம்சுதீன், சேர்மன் ரத்தினம் நகர் ஜமாஅத் செயலாளர் ஹக்கிம் ராஜா, பி.சி.பட்டி ஜமாத் தலைவர் குலாம், அன்னஞ்சி ஜமாஅத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஓடைத் தெரு ஜமாத் தலைவர் ஹக்கீம், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அபூபக்கர், முத்துதேவன்பட்டி ஜமாத் தலைவர் முகமது உமர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சமூக நல்லிணக்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோசப் சேவியர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், டாக்டர் நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வட்டார ஜமாஅத் செய்தி தொடர்பாளர் முகமது சபி நன்றி தெரிவித்தார்...