அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள்


தமிழ்நாடு டிரைவிங் ஸ்கூல் ஓனர் பெடரேஷன் மாநில தலைவர்  ஜெயபாரத் முரளி அனுமதியின் பெயரில் மாநில துணை தலைவர் காளிதாஸ் பாண்டியன் மற்றும் நெல்லை மாவட்ட பொருளாளர் சங்கரநாராயணன் பேன்ஸி டிரைவிங் ஸ்கூல் சம்சுதீன், அருண் டிரைவிங் ஸ்கூல் அற்புதகுமார், அஜய் டிரைவிங் ஸ்கூல் செல்வம் ஆகியோர் சேர்ந்து ஓட்டுநர் பயிற்சி பள்ளியியினை விரைவில் திறக்க அனுமதிக்கும் வகையில் நெல்லைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி  சங்கத்தின் வாழ்வாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட  பாப்புலர் முத்தையா மூலமாக மனு கொடுக்கப்பட்டது.

 

மனுவைப் பெற்றுக் கொண்ட கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா  உடனடியாக உங்களது மனுவை 100 சதவீதம் முதலமைச்சர் வசம் ஒப்படைக்கபடும் என  கூறினார்.

 

இந்நிலையில் 8-8-2020 அன்று   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் .

 

தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10-8-2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என அறிவிப்பில் கூறியிருந்தார். 

 

முதல்வரின் இந்த அறிவிப்பினால் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி சங்கத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் திறக்க பேரூதவி செய்த கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுக்கு  அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி சங்கத்தின்  சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி சங்க நிர்வாகிகள் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.