கலைஞர் அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி ஆன்லைன் வகுப்பில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கையேடு


ஈரோடு வடக்கு மாவட்டம்  கொண்டையம்பாளையம் ஊராட்சி மற்றும் கொங்கர்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில்  மாவட்ட கழக  செயலாளர் என்.நல்லசிவம், முன்னாள் எம்எல்ஏ டி.கே.சுப்பு தலைமையில் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் முதலில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி ஆன்லைன் வகுப்பில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு  கையேடு வழங்கப்பட்டது.


தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் பாலு (கொண்டையம்பாளையம்) மற்றும் ஜானகி(கொங்கர்பாளையம்), வெங்கடேஸ்வரன்(கணக்கம்பாளையம் )டி.என். பாளையம் ஊராட்சி கழக செயலாளர் ஜம்பு (எ)கே.கே.சண்முகம்,யூனியன் கவுன்சிலர் கஸ்தூரி திருமுருகன்,யூனியன் கவுன்சிலர் பி.ஆசீர்வாதம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.