போடி நகர் தேவர் சிலை அருகே கலைஞர் கருணாநிதியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தில் 5 முறை முதல்வர் பதவி வகித்து 13 முறை தோல்வியின்றி தேர்தல் களத்தில் வெற்றி பெற்றவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போடி நகர் தேவர் சிலை அருகே வைக்கப்பட்ட திருஉருவப் படத்திற்கு போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் போடி ஒன்றிய செயலாளருமான எஸ்.லட்சுமணன் மற்றும் போடிநகர செயலாளர் மா.வி.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் திமுகவினர்  நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


அதன் பின்னர் பொதுமக்களுக்கு முக கவசங்களும் சனிடைசர் களையும் தேனி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஆஜீப்கான் போடி நகர் இளைஞரணி அமைப்பாளர் வி.ஜெ.நடராஜ்  துணை அமைப்பாளர்கள் எம்.பாண்டியராஜ் ஜே.ராஜேஷ், அருணாச்சலம், ரமேஷ் வழக்கறிஞர் அணி எஸ்.கனி ஆகியோர் இலவசமாக  வழங்கினர்.