கோபியில் அறம் நேசம் தன்னார்வ இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி


ஈரோடு மாவட்டம் கோபியில் செயல்பட்டுவரும் அறம் நேசம் தன்னார்வ இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7ம் ஆம் ஆண்டு கிராம நல சேவை சுதந்திர தினத்தன்று  நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு கால்கள், ஒரு நபருக்கு மூன்று சக்கர வாகனம், ஒரு நபருக்கு வாக்கர்,இரு நபர்களுக்கு கண் கண்ணாடிகள் மற்றும் இரு நபர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் அறம் நேசம் இயக்கத் தலைவர் எம்.ஜி. சரவணன், இணைச் செயலாளர் சுப்பிரமணியம், இணை பொருளாளர் கே.ஆர்.விஜயா கணேஷ், ஜி.ஆர்.மனோகரன், நம்ம கோபி பவுண்டேஷன் உறுப்பினர்கள்,  குருமந்தூர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post