தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 58 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பஞ்சப்படி வழங்க வேண்டும்.

 


 

மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனே வழங்க வேண்டும்

 

குடும்ப ஓய்வூதியர்களுக்கு நிலுவையிலுள்ள பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

உதகையில் உள்ள சேரிங் கிராஸ் அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எம் சண்முகம், செயலாளர் கே.ராமன், நட்ராஜ் ஜோசப், ஆர்.தினகரன், என்.சங்கரன், வி.ராஜு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.