பழனி திருக்கோயிலின்  உபகோவிலான பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் லலிதா ஹோமம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் 2020 ஆம் ஆண்டுக்கான லலிதா ஹோமம் நடைபெற்றது. 

 


 

மேலும் வருகின்ற 14 தேதி அன்று மதியம் மகாஅபிஷேகமும் சாய்ராட்சையில் அம்பாளுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகின்றது.

 


 

அன்றையதினம் நடைபெறவிருந்த வெள்ளி ரத புறப்பாடு இல்லை என்பதை திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றனர். மேலும் திருக்கோயிலின் பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் திருக்கோயில் பழக்க வழக்கங்கள் படி விழா நடைபெற்று வருகிறது. மேலும் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றனர்.