பழனியில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மாவட்டத் செயலாளர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  

கொரோனாவை காரணம் காட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், வருவாய்த்துறை மூலமாக உதவித்தொகை பெற ஈசேவை மைய்யங்கள் மூலமாக விண்ணப்பிப்பதில் ஏற்ப்படும் சிரமங்களை தீர்க்க வலியுறுத்தியும் 

கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ள இந்த கால கட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை 

 மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும்

 மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post