கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம்  கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆணைக்கிணங்க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.எல்.ஆர். பழனிச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன், துணைத்தலைவர் பொங்கியத்தான் அத்திக்கடவு -அவிநாசி  திட்ட பொறியாளர் கிஷோர் மற்றும் எல்.என்.டி. மேனேஜர் சதீஷ் முன்னிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிக்கு கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

 

இதில் வார்டு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி,மரகதாள் ,செந்தில்,  சுமதி, ஈஸ்வரமூர்த்தி (நாகரத்தினம்)  ராமசாமி, குமார். ராதா, செல்வி, தங்கமணி(சங்கீத. ரேவதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்,சிவகாமி மற்றும் மோகன்குமார் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கருப்புசாமி,சம்பத்குமார்,முருகையன், தங்கவேல், செந்தில்,சுந்தரமூர்த்தி,ரவி ஆகியோர் உடன் இருந்தார்கள்