பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு


 

பழனி ஆயக்குடி பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகின்ற காரணத்தினால் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த சூழ்நிலையில் நேற்று கோரோனோ தொற்று ஆயக்குடி பகுதியில் உச்ச நிலையை அடைந்தது.

 

இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் கொரோனோ பாதித்த பகுதிகளில் சுகாதாரத் துறையின் மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களை பரிசோதித்து வருகின்றனர்.

 

பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பாதித்த பகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, சார் ஆட்சியர் அசோகன், வட்டாட்சியர் பழனிச்சாமி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி

ஆகியோர் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடையே பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார்.

 

மேலும் ஆயக்குடி பகுதியில் மருத்துவ முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு வழங்குகின்ற மருத்துவ முறைகள் பற்றியும் மருந்துகள் பற்றியும் கேட்டறிந்தார்.

 

விரைந்து சென்ற மாவட்ட ஆட்சியர் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.

அங்கு மருத்துவர்களிடம் பல்வேறு கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் பரிமாற்றம் செய்தார்.மேலும்  தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் வசதிகள் உள்ளிட்ட வைகளை கேட்டறிந்தார்.

Previous Post Next Post