திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கருவி மற்றும் அச்சு செய்பவர் கட்டிட திறப்பு 


திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக அரசின்  உயர் தொழில் நுட்பப் பிரிவு திட்ட கட்டிடப் பிரிவின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  கருவி மற்றும் அச்சு செய்பவர் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதன் தொடர்ச்சியாக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு. குணசேகரன் புதிய கட்டிடத்தில்  குத்து விளக்கு ஏற்றி  வைத்து ஒனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில்  முதல்வர் அன்பழகன் வரவேற்றார். அர்பன் வங்கி தலைவர் பி.கே.எஸ்.சடைய ப்பன்,  ஜெயக்குமார்,  கோபாலகிருஷ்ண் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.