கொடிவேரி அணை கட்டிய கொங்காள்வான் அவர்களுக்கு கொடிவேரி அணையில் மணிமண்டபம் அமைக்க மனு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்  அவர்களை புதிய திராவிடர் கழக நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் கொடிவேரி அணை கட்டிய கொங்காள்வான் அவர்களுக்கு கொடிவேரி அணையில் மணிமண்டபம் அமைப்பது சம்பந்தமாக மனுவை வழங்கினார்.



மனுவில் கூறியதாவது தமிழக அரசானது கொடிவேரி அணையின் பராமரிப்பு மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளுக்காக  ரூ.2 கோடி  நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டு விழா தங்களது தலைமையில் நடைபெற்றது.


இது மகிழ்ச்சியான செய்தியாகும் கொங்கு நாட்டில் முதன் முதலில் பவானி ஆற்றின் நீரை கொடிவேரி என்ற இடத்தில் தேக்கி , குளம் வெட்டி கால்வாய் வெட்டிய பெருமை ஊராளி செம்ப வேட்டுவரை சேரும்.


இவர் பெயர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான், இவர் முதலாம் குலோத்துங்கன்( கிபி, 1070 -1125) ஆட்சிக்காலத்தில் கொடிவேரிபவானி ஆறு பாயும் இடத்தை அகலப்படுத்தி பெரும் கற்களை கொண்டு நீரைத் தேக்கி கால்வாய் வெட்டினார்.


இந்தக் கல்வெட்டு செய்தி ஈரோடு வ.ஊ.சி பூங்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைமிகு செயங்கொண்ட சோழ கொங்காள்வானுக்கு கொடிவேரியில்  மணிமண்டபம் அமைத்து தருமாறு ஒட்டுமொத்த வேட்டுவ கவுண்டர் சார்பாகவும் புதிய திராவிட கழகத்தின் சார்பாகவும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது


இந்த மனுவை பெற்றுக் கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மனுவை தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக  புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர். மற்றும் மாவட்டச் செயலாளர் மகிக் கவுண்டர்,மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கூறினார்.


Previous Post Next Post