முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா... மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தகவல்


 

நீலகிரி மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அருகில், கலைஞரின்  திருவுருவ சிலை திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக  17.8.2020 நடைபெறும் என கடந்த 3ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தற்போது மாவட்டத்தில் காற்று-மழை காரணமாக தலைவர் ஸ்டாலினிடம் அனுமதி பெற்று கலைஞரின் திருவுருவ சிலையினை வரும் 24.8.2020 திங்கட்கிழமை பகல் 12 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைக்க உள்ளார். 

 

நிகழ்ச்சி விவர முறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.