சித்தப்பா மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை  

வேப்பூர் அருகே சித்தப்பா மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை  

 


 

வேப்பூர் அருகே சித்தப்பா மகன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது  

 

கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த நடராஜன் மகன் தனசேகர் (வயது 37), இவரும் இவரது சித்தப்பா மகனான கல்லூர் கிராமத்தில் தங்கி மா,புடையூர் கிராமத்தில் சோடா கம்பனி வைத்திருந்த தர்மலிங்கம் மகன்  செந்தில்குமார் (வயது 34)  உறவினர்களான இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்

 

இந்நிலையில் தனசேகர்  வேப்பூரில் உள்ள தனது இடத்தை விற்க தனது அக்காள் புஷ்பவள்ளி கை எழுத்து போட்டால் தான் விற்கமுடியும் என்று தான் நிலம் விற்பதை தனது அக்காளுக்கு தகவல் சொல்லியதாக செந்தில்குமார் மீது தனசேகருக்கு கோபம் இருந்துள்ளது

 

இந்நிலையில் கடந்த 2-2-2017 அன்று தனசேகர் தான்  சென்னையிலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும், தன்னை வேப்பூரிலிலிருந்து கல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்ல உடனே வரவேண்டும் என்று கூறியுள்ளார் அதை நம்பி செந்தில்குமார் வேப்பூர் வந்து தனது இருசக்கர வாகனத்தில் தனசேகரை பின்னால் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார் 

 

வேப்பூர் அடுத்து கழுதூர் சென்ற போது தனசேகர் தான் பாட்டிலில் கொண்டு சென்ற பெட்ரோலை செந்தில்குமார் மீது ஊற்றி தீவைத்துள்ளார் கீழே குதிக்க முயன்ற செந்தில்குமரை தீ அவர்மீது எரியும் வரை  கெட்டியாக பிடித்து கொண்டார் அதனால் இவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது  

 

பின்னர் அக்கம்பக்கத்தினர் செந்தில்குமரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்  இதுகுறித்து தகவலறிந்த அப்போதைய வேப்பூர் இன்ஸ்பெக்டர் (தற்போது திட்டக்குடியில்)  ரமேஷ்பாபு செந்தில்குமாரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து தனசேகரை கைது செய்தார்

 

ஜாமினில் வெளியே வந்த தனசேகர் தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் ஐடி கம்பனியில் பணியிலிருந்தார்

நேற்று முன்தினம் இந்த வழக்கு சிதம்பரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி இளவரசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தனசேகருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார் 

 

கடந்த 2.3.2017 ம்  தேதி கல்லூரில்  சோடா கம்பெனி வைத்திருக்கும் தர்மலிங்கம் மகன்  செந்தில்குமார் (வயது 34,) என்பவரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொலை செய்தது சம்பந்தமாக வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதைய  காவல் ஆய்வாளர்  ரமேஷ்பாபு வழ்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரி தனசேகர் வயது 37,

த/பெ  நடராஜன்,  வேப்பூர்.

தற்போது காந்திநகர்,  சோழிங்கநல்லூர்,  காஞ்சிபுரம் மாவட்டம். என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி எதிரி மீது சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை  செய்யப்பட்டு எதிரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிபதி அவர்கள் எதிரிக்கு ஆயுள் தண்டனை, ரூபாய் 2000 அபராதம் விதித்து தீர்பளித்ததின்பேரில்  எதிரி சிறையில் அடக்கப்பட்டார்.எதிரிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஸ்ரீ அபிநவ்  பாராட்டினார்

Previous Post Next Post