அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சசிகலா பிறந்தநாள் விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சசிகலா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ஈரோடு செங்கோடம்பலயம் கொங்கு மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.


இதைத்தொடர்ந்து பகுதி செயலாளர்கள் நேரு,ஜாஜகான்,வட்டச்செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் ஏற்பாட்டில் பிபி அக்ரஹாரத்தில் 100 பெண்கள் சேலையும் நிர்வாகிகள் அய்யாசாமி சக்திவேல் செல்லதுரை ஆகியோர் ஏற்பாட்டில் பொது மக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாகிகள் குட்டி ராஜா தேவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடந்தது கஸ்பாபேட்டை மரியாதையா பெண்கள் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கும் காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கும் கட்சி நிர்வாகிகள் மீரான் ஒயிட் சாதிக் மெடிக்கல் செந்தில் ஆகியோர் ஏற்பாட்டில் இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி சண்முகம், எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் லோகநாதன்,பாசறை மாவட்ட செயலாளர் கண்ணன் நிர்வாகிகள் நடராஜ், முகமதுராஜா, பூபாலமுருகன்,பாபு என்கின்ற ராஜராஜன், அலாவுதீன்,பிரபு, ராமசாமி பராசக்தி மோகன்ராஜ் சாரி ங்கவேல் சண்முகம் அருண் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.