நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா... பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழாநடந்தது.

 

இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால் பழம், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தது.கோவில் நிர்வாகமும் சிவாச்சாரியார்களும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு தடை உத்தரவு உள்ள காரணத்தால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.