திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் திறப்பு

திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளை திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார்.

 



திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்துவதற்காக  திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட உள்ளது. 

 

இதற்காக தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் 400க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்படுகிறது. 

 

400க்கும் மேற்ப்பட்ட கடைகளில் தினசரி வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்யும் வண்ணம், தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளை  திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். 

 

மேலும் அங்கு உள்ள கடைகளை பார்வையிட்ட அவர், அங்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை தேவைகளுக்கான கட்டுமானங்களை விரைவில் செய்து முடிக்கவும், எம்.எல்.ஏ., சு.குணசேகரன் உத்தரவிட்டார். 

 

அனைவரும் பாதுகாப்போடு கடைகளை நடத்துமாறு அறிவுரை வழங்கினார்.  இந்த நிகழ்வில் , உதவி ஆணையர் கண்ணன், அர்பன் பேங்க் தலைவர் சடையப்பன்,  கண்ணபிரான் மாநகராட்சி அலுவலர் சண்முகம், காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம். செயலாளர் முருகேசன், பொருளாலர் ஆந்தன், பிரகாஷ் மிட்டாயகடை மனோகர் மிட்டாய்கடை, மூர்த்தி கோழி கடை, மனோகர் தேங்காய்கடை அசோக்குமார் தக்காளிகடை, ராகவேந்திரன் தேங்காய் கடை, லோகநாதன், தியாகராஜ் தேங்காய் கடை சம்பத் இலைக்கடை,  

நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post