மங்களூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்தில் விருத்தாசலம் உதவி இயக்குநர் பிரபாகரன், மண்டல அலுவலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஆர்.சங்கர் ஆகியோர்  ஊராட்சியில்  மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்பட்ட நீர்தேக்க தடுப்பணை பள்ளிகட்டிட மதில் சுவர் கட்டுமான பணி. 

 

கோடங்குடி ஊராட்சியில் சிறுபாசன ஏரிகள் குடிமாராத்து பணி தனிநபர் உறிஞ்சி குழி செய்யப்பட்டுவருவது . வாகையூர் ஊராட்சியில் விளையாட்டு மையம் அமைக்க பட்டது போன்றவைகளை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

 

மேலும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஒன்றிய பொறியாளர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தி மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்யவேண்டும் என தெரிவித்தார்கள்.