பழனியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் ஶ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வழிபாடு

பழனியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் ஶ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வழிபட்டனர். 

 


 

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் அனைத்து திருவிழாக்களும் நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில்  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பழனியில்  விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஐந்து குழந்தைகள் மட்டும் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்து பங்கேற்றனர்.

 

அடிவாரம் தனியார் மண்டபத்தில் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்து பூசைகள் செய்யப்பட்டது. வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில்  விஷ்வஹிந்து பரிஷத் சார்பில் இலவசமாக கிரீடம், மாலை, இடுப்பு மற்றும் கை கச்சை என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது‌. இந்த நிகழ்ச்சியில் சமுக இடைவெளியுடன் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் உட்பட மிகச் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்