கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணம்
கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரணம் வழங்கினார்கள்.

 


 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக வினர் அவருடைய திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மா.மனோஜ்  தலைமை தாங்கினார். தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் பிரேமா கோபாலகிருஷ்ணன் குடியாத்தம் நகர கழக பொறுப்பாளர் சௌந்தரராஜன் குடியாத்தம் முன்னாள் திமுக நகர  செயலாளர் விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு சில்டு உதவி நிவாரணம் வழங்கினார்.

 

உடன் நகர துணைச் செயலாளர் முத்து அவைத்தலைவர் நெடுஞ்செழியன் முன்னாள்  செயலாளர் எ.நடராஜன் நகர இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் தலைமை பேச்சாளர் கோடீஸ்வரன்.பரி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நத்த பிரதீப் மற்றும்  கட்சினர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.