ஈரோடு மாவட்டம் சிவகிரி சின்னியம்பாளையம் அருகே ஆறு  ஏக்கர் தைல மர தோப்பில் தீ விபத்து


ஈரோடு மாவட்டம் சிவகிரி சின்னியம்பாளையம் அருகே பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான ஆறு  ஏக்கர் தைல மர தோப்பு உள்ளது. அதில் தோப்பின் நடுவில் மின்சார கம்பி செல்கிறது. இன்று அதிக காற்றின் காரணமாக தைல மரம் மின்சார கம்பியில் மோதி தீப்பிடித்தது. உடனே கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர்.