மன்னார்பாளையம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் புரட்டாசி மாத மஹாலய‌ அமாவாசை முன்னிட்டு மகாயாக பூஜை 
சேலம் மாவட்டத்தில் மஹாலய அமாவாசை சிறப்பு வழிபாடு  சேலம் மாவட்டம் மன்னார் பாளையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் புரட்டாசி மாத மஹாலய‌ அமாவாசை முன்னிட்டு மகா யாக குண்டம் அமைத்து யாகம் வளர்க்கப்பட்டது

 

பின்பு ஹோமகுண்டத்தில் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டதுஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம் இளநீர் குங்குமம் தேன் பஞ்சாமிர்தம் கரும்புச் சாறு போன்றவற்றை சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

 


 

கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு கலசத்தில் உள்ள புனித நீரால் கலச அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்தப்பட்டு புது பட்டு ஆடைகள் நறுமண மலர் மாலைகள் நகை ஆபரணங்கள் சூட்டி திருக்கவில் அர்ச்சகர் குணா சிறப்பாக அலங்காரம் செய்திருந்தார் இதனைத்தொடர்ந்து ஏக தீப ஆரத்தி நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி காட்டப்பட்டது  பின்பு உதிரிபூக்கள் எலுமிச்சை பழங்கள் கொண்டு அஷ்டோத்திர நாமாவளி கூறி அர்ச்சனை செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் எலுமிச்சை பூ பிரசாதம் மற்றும்அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் என்.என்.கே மற்றும் என். என். ஆர் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அமாவாசை பூஜை குழுவினர்  கலந்து கொண்டனர்.