வேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணி தீவிரம்


வேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது, ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் தினமும் 200 டன் வரையில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் முன்பு சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனாலும் சதுப்பேரியில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹13 கோடியில் குப்பை அகற்றும் பணிகளுக்கு டென்டர் விடப்பட்டது. இதற்காக பின்லாந்தில் இருந்து நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது.  1 லட்சம் டன் குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தற்போது, தயார் நிலையில் உள்ளது. ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்படும். தினமும் 80 டன் வரையில் குப்பைகள் பிரிக்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன் கூறுகையில், ‘சதுப்பேரி குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஓரிரு வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். நாள் ஒன்றுக்கு 80 டன் வரையில் குப்பைகள் அகற்றப்படும். இந்த குப்பைகள் உரமாகவும், கல், மண், எரிவாயு உட்பட 5 வகையாக பிரிக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் மரங்கள் நடப்பட்டு, பயனுள்ள இடமாக மாற்ற ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.