தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்திலிருந்து பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் திம்பம் மலைப் பாதையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.ஆனால் தமிழக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று வேகமாக செல்ல முயன்றதால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் நேற்று இரவு முதல் தற்போது வரை சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பால் மருத்துவத்திற்காக செல்பவர்கள், அவசர பணிக்காக செல்பவர்கள், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அவதிப்பட்டனர். இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தடுக்க கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post Next Post