நாங்குநேரியில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை: மாஸ்க் அணிந்த 12 பேர் கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை. ஊர் முழுவதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி 12 பேர் கொண்ட முகக் கவசம் அணிந்த கும்பல் வெறிச்செயல். 


2019 நவம்பர் மாதம் மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அதே ஊரை சேர்ந்த வாண்மதி என்பவரைவ காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் டவுண் வயல்தெருவில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2020 மார்ச் மாதம் நம்பிராஜன் மனைவி வாண்மதி உறவினர்கள் நாங்குநேரி ஹோட்டலில் வைத்து ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை நம்பிராஜன் தரப்பினர் கொலை செய்தனர்.


இதற்கு பழியாக இன்று பிற்பகல் மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி ஆகியோரை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முக்கவசம் அணிந்து ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடி குண்டுகளை வீசி கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.


சண்முகத்தாய் தலையை வெட்டி ஊர் மத்தியில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாங்குநேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது, நாங்குநேரி சுங்கசாவடி சிசிடிவி காட்சிகள் வைத்தும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஊர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.