ராமநாதபுரம் 2021 -ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு


 

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா ஆய்வுக்கு  வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையொட்டி நடைபெற்ற மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்   என முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் 22ம் தேதி  வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பது  குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னால் அமைச்சர்  அன்வர் ராஜா முன்னிலை வகித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில்"  ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா பணிகளை   ஆய்வுகளை மேற்கொள்ள வருகைதரும்  தமிழக முதல்வர் முதல்வருக்கு  மாவட்ட அதிமுக சார்பாக  பார்த்திபனூரில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.பரமக்குடியை தொகுதியை சேர்ந்த அனைத்து ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும்  ராமநாதபுரம், திருவாடனை  தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து மாவட்ட செயலாளர் முனியசாமி பேசுகையில்

 

கொரோனா பாதிப்பு குறித்து  எந்த மாநிலத்திலும் மாவட்டம் வாரியாக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று   ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். திமுக வைப் போல் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யாமல் ராணுவ சிப்பாய்கள் போல் உள்ள அதிமுக தொண்டர்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறோம். இதன் மூலம் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்தையா,நாகநாதன், குப்புசாமி,காளிமுத்து. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபால சிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் பரமக்குடி நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.