ராமேஸ்வரம் பக்தர்கள் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்காக அனுமதி கோரி கோவில் இணை ஆணையர் இடம் திமுக சார்பில் மனு
ராமேஸ்வரம் பக்தர்கள் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்காக அனுமதி கோரி கோவில் இணை ஆணையர் இடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 


 

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் வரும் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவர்கள் அக்கினி தீர்த்தம் மற்றும் 22 புண்ணிய தீர்த்தங்கள் பயன்பாட்டிற்கு இல்லாத காரணத்தால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி ச் செல்கின்றார்கள். மேலும் கிழக்கு கோபுர வாசல் திறந்து பக்தர்களை அனுமதிக்கின்றார்களோ அதேபோன்று மேற்கு கோபுர வாசலின் கதவை திறந்துபக்தர்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும் மேலும் தற்போது மேலக் கோபுர வாசல் திறக்கப்படாததால் மாற்றுத் திறனாளிகள் முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலக் கோபுர வாசல் திறந்தால் மேற்கண்ட மாற்றுத் திறனாளிகள் முதியோர்கள் எளிதாக கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவே மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையரிடம் நகர் திமுக சார்பாக நகர் கழகத்தின் செயலாளர் கே.இ. நாசர்கான் தலைமையில் மனு அளிக்கப்பட்டது உடனடியாக பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளார்கள்