ஆண்டிபட்டியில் பிஜேபி சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை


 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமரின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுசமயம் ஆண்டிபட்டி தேனி சாலையில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் நகர பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் குமார் மற்றும் மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் தங்கராஜ், மாவட்ட பிரச்சார குழு கண்ணன் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில், பாரத பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து, வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கட்சியினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஆறுமுகம் கணேசன், பாலமுருகன், வேல்முருகன், ராஜேஷ் பொதுக்குழு உறுப்பினர் ரமணி கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.