உடல்நலம் பாதித்த மாணவனுக்கு ரூ. 50,000 நிதியுதவி... திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்  வழங்கினார்


 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட கே. வி. ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த மாணவன் நவீன் என்பவருக்கு இருதய  வால்வுகள் இரண்டும் செயலிழந்த  நிலையில் இது குறித்த தகவலை அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன்  உடனடியாக மாணவனின் பெற்றோரை தொடர்புகொண்டு மருத்துவ செலவுக்காக  ரூ. 50,000 வழங்கினார். இந்நிகழ்வின் போது  முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் அன்பகம் திருப்பதி, கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.