திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு 700 ஏழைகளுக்கு உதவி


 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம். மாவட்ட செயலாளர் சரவணன் 700 ஏழைகளுக்கு உதவி 

 

திருப்பத்தூர் மாவட்டம் வீட்டு வசதி வாரியம் பகுதி ஒன்றுக்கு அருகில்  உள்ள தனியார் வணிக வளாகம் பக்கத்தில் பாரதப் பிரதமர் மோடியின் எழுவதாவது பிறந்த நாளை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சரவணன் 700 பேருக்கு உதவி செய்து மகிழ்ந்தார்.

 

மோடி என்கிற மாயாஜாலம் கடந்த பத்து வருடங்களாக மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது.

 

அதன் அடையாளமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகி மாவட்ட செயலாளர் சரவணன் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க நினைத்து துப்பரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 700 பேருக்கு மரக்கன்றுகளை கொடுத்து வேட்டி சேலை, நோய் தொற்று காலத்திற்கான முகக்கவசம் போன்றவற்றை கொடுத்து உதவி செய்து மகிழ்ந்து பாரத பிரதமரின் மறு உருவமாக மாவட்ட செயலாளர் சரவணன் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

 

இந்த பிறந்த நாள் பரிசு வழங்கும் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினி ஆலோசனையின் படி வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.