ஈரோடு தெற்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை 


ஈரோடு தெற்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அதியமான் ஆணைக்கிணங்க தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு,ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இரா.இராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.வீரக்குமார் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி சுப்பிரமணி உள்ளிட்ட ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.