சிவகிரி பொது சுகாதாரத் துறையும், மலையம்பாளையம் காவல் நிலையமும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி  

ஈரோடு மாவட்டம் சிவகிரி பொது சுகாதாரத் துறையும், மலையம்பாளையம் காவல் நிலையமும் இணைந்து கருமாண்டம்பாளையம்தில் முகக் கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூ200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது.

 

மேலும் பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி பற்றியும் முகக் கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் உலகையே அச்சுறுத்தும் கொரோனவைரஸ் இல் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.