லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் கல்வித் தந்தை கே.ராமசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்


 

கோவில்பட்டி, கே.ஆர். நகர் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில்  நிறுவனர் நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. 

 

கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படும் வகையில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக், நேஷனல் பொறியியற் கல்லூரி மற்றும் கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவி, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான தொழிற் கல்வியும், 

 

அதன் மூலம் அந்த மாணவர்கள் சார்ந்த சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை  சிந்தாந்தமாகக் கொண்ட கல்வித் தந்தை, ஆன்மீகச் செம்மல் கே.ஆர். அவர்களின் 84ம் ஆண்டு பிறந்தநாள், நிறுவனர் நாளாக வெகு சிறப்பாக பாலிடெக்னிக் கலையரங்கில் நடைபெற்றது.  

 

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். தாளாளர் கே.ஆர். அருணாசலம் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர்  கருத்தப்பாண்டி வரவேற்புரையாற்ற பயிலக முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

 

நிகழ்ச்சியில் கே.ஆர். அவர்களின் தொண்டு பற்றிய குறும்படம் வெளியிடப் பட்டது. குறும்படத்தை துணைத் தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி வெளியிட தாளாளர் கே.ஆர். அருணாசலம்  பெற்றுக் கொண்டார்கள். 

 

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், உறவினர்கள், நேஷனல் பொறியியற் கல்லூரி இயக்குநர் முனைவர் சே. சண்முகவேல், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மதிவண்ணன், நண்பர்கள், பொதுமக்கள், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் ஆசிரிய அலுவலர்கள், இணையவழி மூலமாக  இந்நாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

 

தொடர்ந்து இணையவழி மூலமாக கல்வித்தந்தை கே.ஆர். அவர்களின் பணியில் ஓங்கி நிற்பது கல்விப்பணியே என்று அருள்நம்பி அவர்களும், சமுதாயப் பணியே என்று சுப்பிரமணிய பாரதி அவர்களும், ஆன்மீகப் பணியே என்று கருத்தப்பாண்டி அவர்களும் கருத்துரையாற்றினார்கள். 

 

இக்கருத்தரங்கின் தலைவராக நேஷனல் பொறியியற் கல்லூரி முன்னாள் இயக்குநர் முனைவர் கேஎன். கே.எஸ்.கே. சொக்கலிங்கம் சிறப்புரையாற்றினார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஆறுமுகம் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.  

 

தொடர்ந்து அனைத்துத் துறை சார்பிலும் தனித்தனியாக இணைய வழிக்கருத்தரங்குகள் நடைபெற்றன. பயிலக முன்னாள் மாணவர்கள், பி. கண்ணன், எஸ். வெங்கடேசன், ஆர்.வி.சீனிவாசன், எம். மகேஸ்வரன், விஜயராகவன் ஆகியோர் பல்வேறுபட்ட தலைப்புக்களில் உரையாற்றினார்கள். ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட  இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.  மேலும், ஒவ்வொரு துறை சார்பிலும், 

 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக இணையவழி மூலம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும், வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.1000-ம், இரண்டாம் பரிசாக ரூ.750-ம் மூன்றாம் பரிசாக ரூ.500-ம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில் ஆசிரியர்களும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களும் செய்திருந்தனர்.

Previous Post Next Post