சேலம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோட்டை அழகிரி நாதசுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோட்டை அழகிரி நாத சுவாமிக்கு நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் புது பட்டு ஆடைகள் சூட்டி திருக்கோவில் பட்டாச்சாரியார் சுதர்சனம் மற்றும் கௌதம் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தார்.
பின்பு துளசிதளங்களால் சிறப்பாக அர்ச்சனை செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவிலின் உட்புறத்தில் நுழையும் பக்தர்கள் அனைவருக்கும் ஹேன் சேனிடைஷர் வழங்கப்படுகிறது