சாப்டுா் காவல் நிலையம் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்படைக்க ஆா்டிஓ உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி சதுரகிரி மகாலிங்கம் கோயில் வாழைத்தோப்பு பகுதி சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் ரமேஷ் (17) பாலிடெக்னிக் மாணவன் இவரது சகோதரா் இதயக்கனி (26) அதே பகுதியை சேர்ந்த புனிதா என்ற பெண்ணை காதலித்து ஒரு மாதத்திற்கு முன்பு மாயமானா்.

 

புனிதா பெற்றோர் கொடுத்த புகார் பேரில் போலீசாா் ரமேஷ் ரமேஷ் குடும்பத்தாரை விசாரித்து வந்தனா். கடந்த 16ம்தேதி அன்று இரவு சாப்டுா் காவல் நிலைய எஸ் ஐ ஜெயக்கண்ணன் அவரது குழு ரமேஷ் விசாரணைக்கு அழைத்து சென்றனா். மறுநாள் காலையில் வாழை தோப்பு மலை பகுதியில் தூக்கில் தொங்கினாா் ௭னவே மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அந்த காவல் நிலையம் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்படைக்க ஆா்டிஓ உத்தரவிட்டுள்ளாா்.