ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

 

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிருடன் மீட்பு.

 


 

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் கிணற்றுக்குள் மூழ்கி உள்ளே சென்றதால் காப்பாற்ற முயன்ற சிறுவன் அதிர்ச்சி அடைந்து உறவினர்களை அழைத்து கூச்சலிட்டதால் அவரது உறவினர்கள் காப்பாற்ற முயன்ற சிறுவனை உயிருடன் மீட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஜோலார்பேட்டை அடுத்த சோம நாயக்கன்பட்டி ஊராட்சி, டி. வீரப்பள்ளி அருகே உள்ள பூசணிக்காய் வட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மகன் கனிஷ் (4) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நீதி என்பவரின் மகன் சுமன்த் (11). ஆகிய இருவரும் நேற்று மதியம் சுரேஷ் என்பவரின் நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது விவசாய நிலத்தில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கனிஷ் என்ற சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த அதைக்கண்டு சுமந்த் என்ற சிறுவன் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்து முயற்சி செய்துள்ளான்.

 

 ஆனால் கனிஷ் என்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உள்ளே சென்றதால் அதிர்ச்சியடைந்த சுமந்த் கத்தி கூச்சலிட்டு உள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் கிணற்றை ஓடிவந்து பார்த்தபோது கனிஷ் கிணற்றுக்குள் உள்ளே சென்று விட்டான் என கத்தி கூச்சலிட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமந்த்தை மீட்டு, பின்பு கனிஷை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்து போராடியுள்ளனர்.

 

 ஆனால் 70 அடி கிணற்றில் 40 அடி ஆழம் தண்ணீர் இருந்ததால் முயற்சி செய்தும் பலன் இல்லாததால் ஜோலார்பேட்டை போலீசாருக்கும், நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்பு தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் குதித்து பலமுறை போராடியும் கனிஷின்  உடல் கிடைக்காததால் கிணற்றில் இருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்தனர்.

 

 பின்னர் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு கனிஷின் உடலை தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். இறந்த நிலையில் கணேஷின் உடலை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.பின்னர் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.