திம்பம் மலைப்பாதையில் உலாவந்த ஒற்றையானை...பீதியடைந்த வாகன ஓட்டிகள்


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.இந்த திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது.

 


 

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது  அப்போது திம்பம் மலைப் பாதையில் ஒற்றை யானை வலம் வந்ததால் வாகன ஓட்டிகள் உச்சகட்ட பீதியடைந்தனர். நீண்ட தூரம் உலா வந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாமல் சென்றதால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.