பழனியில் SDTU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் SDTU தொழிற் சங்கம் சார்பில்  பஸ் நிலையம் அருகே மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

மோட்டார் வாகனத் தொழிலில் அழித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDTU திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் உமர் ஃபாருக் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் ஹபீப் ரஹ்மான் முன்னிலை வகித்தார் SDTU மாநில பொதுச் செயலாளர் அஜித் ரஹ்மான் மத்திய மாநில அரசுகள் புதிதுபுதிதாக சட்டங்களை இயற்றி மக்களை நசுக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கண்டன உரையாற்றினார்.

SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் 

கைசர் அலி

மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.