தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
 

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு திருநெல்வேலி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த், கழக கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் வக்கீல் ஜெனி உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.